திருமங்கலம்: தடுப்பு சுவரில் மோதிய தனியார் பேருந்து

81பார்த்தது
திருமங்கலம்: தடுப்பு சுவரில் மோதிய தனியார் பேருந்து
மதுரைக்கு சங்கரன்கோவிலிருந்து தனியார் பேருந்து இன்று (ஜன. 2) அதிகாலை வந்து கொண்டிருந்தது. பேருந்தில் மொத்தம் 82 பயணிகள் இருந்துள்ளனர். பேருந்தில் வைரமுத்து என்பவர் ஓட்டுநராக இருந்தார். 

இந்நிலையில் திருமங்கலம் நகர்ப் பகுதியில் உள்ள ஆனந்தா தியேட்டர் பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு மீண்டும் சென்ற பொழுது ஸ்டேட் பேங்க் அருகே எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் பேருந்தில் பயணித்த 12 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்த எட்டு பெண்கள் உட்பட 12 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி