திருமங்கலம்: விதை நெல் விற்பனைக்குத் தயார்

56பார்த்தது
திருமங்கலம்: விதை நெல் விற்பனைக்குத் தயார்
மதுரை விவசாய கல்லூரி உழவியல் துறை சார்பில் விவசாயிகளுக்குத் தேவையான ஆதாரநிலை, சான்றளிக்கப்பட்ட நெல் விதைகள் விற்பனைக்கு உள்ளன. ஆதார நிலை 1இல் ஆடுதுறை 54, கோ 55 ரகம், ஆதார நிலை 2இல் ஆடுதுறை 54 ரக நெல் விலை கிலோ ரூ. 44. சான்றளிக்கப்பட்ட ஆடுதுறை 58 ரக நெல் விதை கிலோ ரூ.38. விதைகள் 30 கிலோ பையாக விற்கப்படுகிறது, பார்சலாகவும் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அலைபேசி:
94420 54780.

தொடர்புடைய செய்தி