மதுரை திருமங்கலம் கப்பலூர் டோல்கேட் அருகே அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக நேற்று (நவ. 22) கப்பலூர் விஏஓ திருப்பதிக்கு தகவல் கிடைத்தது. அவர் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.