மதுரை மாவட்டம் திருமங்கலம் லட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் (52) என்ற கூலித் தொழிலாளி, தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். மனைவியின் கண்டிப்பால் மனமுடைந்த அவர், பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.