உசிலம்பட்டி: ஆக்கிரமிப்புகளால் மழைநீர் வடிகாலுக்கு பாதிப்பு

55பார்த்தது
உசிலம்பட்டி: ஆக்கிரமிப்புகளால் மழைநீர் வடிகாலுக்கு பாதிப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு இந்திரா நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்களின் குடியிருப்புகள் உள்ளன. இந்த இந்திரா நகர் காலனி பகுதி வழியாக செல்லும் மழைநீர் வடிகாலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இடம் ஒதுக்கீடு செய்த பின்னரே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

அடுத்தடுத்த காலங்களில் இந்த மழைநீர் வடிகால் பகுதி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது முழுவதுமாக மழைநீர் வடிகாலை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளையும், சாக்கடை கால்வாய்களையும் மூடப்பட்டுள்ளதால் மழைநீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. 

இது குறித்து ஊராட்சி நிர்வாகம் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி