சாலை விபத்தில் வாலிபர் பலி

2பார்த்தது
சாலை விபத்தில் வாலிபர் பலி
மதுரை அருகே பாரைபத்தியை சேர்ந்த சந்திரகுமார்(18) மற்றும் அவரது நண்பர் நிசாந்த் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள எலியார்பத்தி டோல்கேட் அருகே மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை சென்ற கார் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதில் சந்திரகுமார் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். நண்பர் நிசாந்த் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.