
கல்லூரி பேருந்தை சேதப்படுத்திய போதை ஆசாமிகள்
மதுரை அருகே தனியார் கல்லூரி பேருந்து கள்ளிக்குடிக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றபோது, இறுதி ஊர்வலத்தில் வந்த சிலர் போதையில் ஓட்டுநரைத் தாக்கி, பேருந்தின் கண்ணாடியை கல்வீசி சேதப்படுத்தியுள்ளனர். இதனால் பேருந்தில் இருந்த மாணவிகள் கூச்சலிட்டு இறங்கி ஓடினர். இதுகுறித்து பெருங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





































