மதுரை ஆஸ்டின்பட்டி அருகே மே 3 அன்று நடந்த இரட்டை கொலை தொடர்பாக நிலையூரைச் சேர்ந்த அழகு சேதுபதி (28), வசந்த் (23), கோடீஸ்வரன் (21), பாண்டிதுரை (27), சங்கீத் (25), ராஜவேல் (26), விஷ்வா (24), கருப்பு ராஜா (18), தினேஷ் (25), கலையரசன் (24) உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாடிப்பட்டி மவுதன் கோஷ்டிக்கும் அழகு சேதுபதிக்கும் இடையே யார் பெரிய ரவுடி என்ற மோதல் காரணமாக இந்த கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. சமாதானம் பேசுவதாகக் கூறி அழைக்கப்பட்ட மவுதன், நண்பர் பத்மநாதனுடன் ஆஸ்டின்பட்டி பகுதிக்கு வந்தபோது அழகு சேதுபதி கோஷ்டியினர் மறைந்திருந்து இருவரையும் கொலை செய்துள்ளனர்.