குப்பை கிடங்கில் அதிரடி ஆய்வு. பல கோடி முறைகேடு.

260பார்த்தது
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பை சேகரிக்கும் மையத்தில் இன்று (மே. 23) மதுரை மேயர் பொறுப்பு வைக்கும் துணை மேயர் நாகராஜன் திடீர் ஆய்வு செய்தார்.
துர்நாற்றம் வீசும் குப்பை கிடங்கில் நோய் தொற்று பரவும் சூழ்நிலையில் 150 க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு உபகரணங்களின்றி குப்பையில் கிடைக்கும் பொருட்களை சேகரித்து வருவதாகவும் ஒரு டன்னுக்கு 2000 ரூபாய் என்ற நிலையில் மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் நிறுவனம் கட்டிட இடிபாடுகளையும் சேர்த்துமுறைகேடு செய்வதாகவும் குப்பைகளை சேகரிப்பதில் அரசு பணத்தை முறைகேடு செய்யும் நிறுவனங்களின் உரிமையை ரத்து செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி