மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக 155 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், உரிய மறுவாழ்வு மற்றும் இழப்பீடு கோரி சின்ன உடைப்பு மக்கள் போராடி வருகின்றனர். நேற்று மதுரையில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழியிடம் மனு அளிக்கச் சென்றபோது, அமைச்சர் மூர்த்தி தங்களை ஒருமையில் பேசி அவமதித்ததாகவும், சாதி வன்மத்துடன் நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டி, இன்று (பிப். 11) அமைச்சர் மூர்த்தி உருவ பொம்மையை எரிக்க முயற்சித்தனர். போலீசார் அவர்களை தடுத்தனர். இப்பகுதியில் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.