பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக இன்று (பிப். 16) மதுரை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மகளிருக்கு ₹5000 வழங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். "சிறப்பு கோடைகால நிதியாக ₹2000 கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?" என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "வரவேற்கிறோம். மாறுபட்ட கருத்து சொன்னால் தாய்மார்கள் கோபப்படுவார்கள்" என்று அவர் கூறினார்.