மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில் நேற்று (பிப். 16) ஒரு கார் திடீரென நிறுத்தப்பட்டதால், பின்னால் வந்த பள்ளி பேருந்து காரில் உரசி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, பள்ளி மாணவர்களை இறக்கிவிட்டு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த பேருந்தில் மாணவர்கள் யாரும் இல்லை. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.