தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 21) காலை மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொன்னாடை, புத்தகங்கள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், நாகமலை புதுக்கோட்டையில் உள்ள எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் புறப்பட்டார். முதல்வர் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.