மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (மே 30) வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் மற்றும் அலகு குத்தி, பறவை காவடி எடுத்து அபிஷேகம் செய்வதற்கு ஊர்வலமாக அதிகாலை முதலே திருப்பரங்குன்றத்தை நோக்கி வந்தனர். சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருவதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் திரும்பிய பக்கமெல்லாம் அரோகரா கோஷம் கேட்கிறது.