திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சென்ற வாரம் அமைச்சர் நிர்மல் குமார் மதியம் தரிசனம் செய்ய வந்தார். அப்போது நடை சாத்தும் நேரம். இருப்பினும் சாமி தரிசனம் செய்தபோது ஆகம விதிகள் மீறப்பட்டதாகவும், கோயில் கருவறை வரை செல்போன் பயன்படுத்தப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. அன்றைய தினம் தாமதமாகவே நடை சாத்தப்பட்டது. இதையடுத்து, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தவெக நிர்மல்குமார் சென்றபோது நடந்தது என்ன? என்று அறநிலையத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.