மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி தொகுதிகளில் மகளிர் அணி நிர்வாகிகள் வரும் 23ம் தேதி முதல் "வெல்லும் தமிழ்ப்பெண்கள்" தேர்தல் பரப்புரை பணிகளைத் தொடங்குகின்றனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் இன்று (பிப். 22) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள், மகளிர் அணி மற்றும் தொண்டரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.