மதுரை பழங்கானத்தம் மேலவடக்குத் தெருவைச் சேர்ந்த முத்துக்குமாரின் மகன் அஸ்வந்த் என்பவர் பழங்கானத்தம் பகுதியில் நர்சரி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்காக சிலைமானில் உள்ள தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு வீட்டில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த அஸ்வந்த் உட்பட அனைவரும் படுகாயம் அடைந்தனர். அனைவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (டிச. 30) சிகிச்சை பலனின்றி அஸ்வந்த் உயிரிழந்தார். இதுகுறித்து சிலைமான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.