மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த தர்மராஜ் (75) தனது மகள் திவ்யா மலேசியாவில் மேற்படிப்பு செல்வதாக நினைத்து பணம் அனுப்பி வந்துள்ளார். ஆனால், திவ்யா அனுப்பானடியைச் சேர்ந்த பிரகாஷை காதலித்து, பெற்றோருக்கு தெரியாமல் திருநகரில் அவருடன் குடும்பம் நடத்தி, இரண்டரை வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். நவம்பர் 5 அன்று திவ்யா தற்கொலைக்கு முயன்றபோதுதான் தர்மராஜுக்கு உண்மை தெரியவந்துள்ளது. பிரகாஷுடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. திவ்யா நவம்பர் 13 அன்று உயிரிழந்தார். இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.