மதுரை: வீட்டு வாசலில் வாலிபர் கொடூரமாக கொலை

77பார்த்தது
மதுரை: வீட்டு வாசலில் வாலிபர் கொடூரமாக கொலை
மதுரை மாவட்டம், சிலைமான் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் அழகர்சாமி (19) என்பவர் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு கூலி வேலைக்குச் சென்று வந்தார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்ற அழகர்சாமி இரவில் அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

பின்னர், மது போதையில் வீட்டுக்குத் திரும்பியவர் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது மறுநாள் அதாவது நேற்று புதன்கிழமை (மார்ச் 12) அதிகாலை 3 மணிக்கு அழகர்சாமியின் வீட்டின் கதவை தட்டிய மர்ம நபர்கள் அவரை வெளியே வரும்படி அழைத்துள்ளனர். இதையடுத்து, வெளியே வந்த அழகர்சாமிக்கும், அவர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள், அழகர்சாமியை சரமாரியாக கத்தியால் கொடூரமாக குத்திவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இதில், சம்பவ இடத்திலேயே அழகர்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து சிலைமான் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி