மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், அதிமுக நிர்வாகி செந்தில் கொலை குடும்பப் பிரச்சனையால் நடந்ததாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் கூறப்படும் கருத்துக்கள் உண்மைக்கு மாறானவை என்றும், 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். டீக்கடைக்குச் சென்றபோது போதையில் இருந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறில் படுகொலை செய்யப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.