மதுரை: அதிமுக பிரமுகர் படுகொலை.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்

1088பார்த்தது
மதுரை: அதிமுக பிரமுகர் படுகொலை.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மதுரை திருப்பரங்குன்றம் அருகே அதிமுக பிரமுகர் செந்தில் இன்று (பிப்ரவரி 6) காலை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு அச்சமில்லை என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில், திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி