மதுரை வில்லாபுரம் அருள்மிகு சங்கவிநாயகர் திருக்கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று (நவ. 5) காசி விஸ்வநாதர் விசாலாட்சி சன்னதியில் 16 வகை வாசனை திரவியங்கள் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பின்னர் காசி விஸ்வநாதருக்கு அன்ன அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியன், செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.