கார்த்திகைத் திருநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், மதவெறி சக்திகள் கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற முயல்வதாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். மதவெறி அரசியலை எந்த நாற்காலியில் அமர்ந்து அமல்படுத்தினாலும் அதை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற சக்திகளுக்கு உண்டு என்றும், இந்துத்துவா மதவெறி அரசியலை எதிர்கொள்ள குன்றென நிமிர்ந்து நிற்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.