தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூடும் அரசின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரவேற்றுள்ளது. குத்தகைக் காலம் முடியும் வரை மதுக்கடைகளை மூடக்கூடாது என்ற வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, மக்கள் நலன் கருதி அரசு மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறினார். மதுக்கடை மூடல் பலரை மகிழ்வித்தாலும், மனுதாரர்களுக்கு இழப்பு என்றும், மதுக்கடை திறக்காத நாட்களுக்கான தொகையை திரும்ப அளிப்பது குறித்து 2 வாரங்களில் அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.