மதுரை: மழைநீரில் அடித்து சென்ற பக்தர்களின் செருப்புகள்

1பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று (டிச. 2) இரவு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் பெய்த கனமழையால், சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழையால் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால், திருப்பரங்குன்றம் கோயில் வாயிலில் பக்தர்கள் அணிந்திருந்த செருப்புகள் திடீர் மழையில் அடித்துச் செல்லப்பட்டன. சுவாமி தரிசனம் முடித்து வெளியே வந்த பக்தர்கள் தங்கள் செருப்புகளைக் காணாமல் தேடித் தவித்தனர்.