மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோட்டில் உள்ள அழகு முத்துமாரியம்மன் திருக்கோவிலின் 55வது ஆண்டு பங்குனி பொங்கல் விழா இன்று (மார்ச். 24) நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்தனர் மற்றும் அழகு குத்தி தயராக இருந்த தீ குண்டத்தில் தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
ஒரு சில பக்தர்கள் தங்கள் குழந்தையுடன் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். 55வது பங்குனி பொங்கல் விழாவில் இன்று மாலை அக்னி சட்டி ஊர்வலமும் நாளை காலை அன்னதானம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.