மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வலையங்குளம் பகுதியிலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் 110 வது ஆண்டு நிறைவு விழாவில் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கெளரவ படுத்தும் விதமாக பேண்ட் வாத்தியம் முழங்த வரவேற்பு அளிக்கப்பட்டு முன்னாள் மாணவர்களால் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவித்தனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் உஷா பானு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேலும் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களும் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களும் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.
பள்ளியின் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் மாணவர்கள் செல்போனுடன் நேரத்தை வீணாக்காமல், எவ்வாறு நேரத்தை நல்லவிதமாக, பயன்படுத்தலாம் என்றும் மாணவர் திறன் வளர்ப்பு நிகழ்வாக முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வ நாதன் ஆனந்த் அவர்களின் வாழ்கை முறையை நாடகமாக மணவர்கள் நடித்து காட்டிய விழிப்புணர்வு நாடகம் அனைவரையும் கவர்ந்தது.