மதுரை: விபத்தில் இடிபாடுகளில் சிக்கி தவித்த டிரைவர்.

0பார்த்தது
மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை கே எம் ஆர் கல்யாண மஹால் பாலம் இறக்கத்தில், தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் மரக்கன்று பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த மற்றொரு லாரி மோதியதில், பராமரிப்புத் தொழிலாளி கார்த்திகேயன் (39) படுகாயமடைந்தார். மோதிய லாரியின் ஓட்டுநர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடிபாடுகளில் சிக்கித் தவித்த நிலையில், தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டனர். நாகமலை புதுக்கோட்டை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி