மதுரை: தீப திருவிழாவிற்காக 25ல் கொடியேற்றம்.

2பார்த்தது
மதுரை: தீப திருவிழாவிற்காக 25ல் கொடியேற்றம்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் 25-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையிலும் இரவிலும் சுவாமி நகர் உலா நடைபெறும். முக்கிய நிகழ்வாக டிசம்பர் 3-ந் தேதி திருக்கார்த்திகையன்று காலையில் தேரோட்டமும், மாலை 6 மணிக்கு மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும்.