மதுரை: முதல் நாளிலேயே 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விமானம்

60பார்த்தது
மதுரை: முதல் நாளிலேயே 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விமானம்
மதுரை விமான நிலையம் நேற்று முன்தினம் முதல் 24 மணி நேரம் சேவை தொடங்கிய நிலையில் நேற்று (டிச. 21) மதுரையிலிருந்து முதல் முறையாக சென்னை வழியாக மலேசியா பினாங்கு செல்லும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று இரவு சென்னையிலிருந்து 8:45 மணிக்கு மதுரை வரும் இண்டிகோ விமானம் மதுரையிலிருந்து 9:05 மணிக்கு சென்னை வழியாக மலேசியா பினாங்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. சென்னையிலிருந்து மதுரை வரவேண்டிய விமானம் தாமதம் காரணமாக 8:45 க்கு வரவேண்டிய விமானம் 10:55 க்கு வந்து மீண்டும் 11:15 க்கு மலேசியா (பினாங்கு) புறப்பட்டது.

தொடர்புடைய செய்தி