சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வரும் ஜனவரியில் திமுகவில் இணைவதாக வரும் வதந்தி குறித்த கேள்விக்கு, 'வதந்தி தானே' என பதிலளித்து சென்றார். மேலும், மதுரை அசுத்தமான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தது குறித்த கேள்விக்கு, 'அவர்களிடம் தான் கேட்க வேண்டும்' என பதிலளித்துச் சென்றார். செங்கோட்டையன் பின்னணியில் திமுக உள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறியது உள்ளிட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.