இன்று (மார்ச் 25) ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடம் ரூபாய் பதினோரு லட்சத்து அறுபத்து நாலாயிரம் (11,64,000/-) மதிப்புள்ள ட்ரோன் கேமராக்கள், லேப்டாப்கள், மொபைல் போன்கள் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.