மதுரை: பச்சை குதிரை வாகனத்தில் முருகப்பெருமான்

73பார்த்தது
மதுரை: பச்சை குதிரை வாகனத்தில் முருகப்பெருமான்
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (பிப். 5) இரவு முருகப்பெருமான் பச்சை குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. 

அதனை தொடர்ந்து நகரில் திருவீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபத்தன்று வீதி உலா வராத சின்னத் தேர் நாளை (பிப். 6) காலை தெப்ப திருவிழாவை முன்னிட்டு வீதி உலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி