மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையில் உள்ள புதுக்குளம் கண்மாய் அருகே தீ வைத்து எரிக்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று இருப்பதாக இன்று (மார்ச். 18) மதியம் பெருங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. உடனடியாக திருமங்கலம் காவல் ஆய்வாளர் சரவணன், திருமங்கலம் துணை கண்காணிப்பாளர் அன்சுல் நாகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் ஓடிச் சென்றது.
சம்பவ இடத்தில் தடய அறிவியல் துறையினர் பிரேதத்தை ஆய்வு செய்தனர். மேலும் உடல் கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் அளித்த புகாரின் பேரில் பெருங்குடி போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் நடந்த இடத்திற்கு சிறிது தூர தொலைவில் கடந்த 14 நாட்களுக்கு முன்பு அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டு அதன் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.