மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று (ஜூன் 2) முதல் தொடர்ந்து திருக்கோவில் கம்பத்தடி மண்டபத்தில் காலை மாலை என ஏழு லிட்டர் பால் காய்ச்சப்பட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களின் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோவில் சார்பில் பால் வழங்கப்பட உள்ளது.
கோவிலில் தற்போது குடமுழுக்குக்கான பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமான ஒரு இடத்தில் பால் வினியோகம் செய்யப்படுவதாகவும் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் நிரந்தரமான இடத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி திருக்கோவில் மட்டும் இத்திட்டம் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.