மதுரை: திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு

3பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, இன்று மாலை மலைக்கு செல்ல முயன்ற இந்து முன்னணி மற்றும் பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இரு காவலர்கள் காயமடைந்தனர். இந்நிலையில், மதுரையில் அண்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட டிஐஜி மூர்த்தி ஆகியோர் திருப்பரங்குன்றத்தில் முகாமிட்டுள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி