மதுரையில் கிளாமர் காளீஸ்வரன் கொலை வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைக்காணியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு 29ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கிளாமர் காளி கொலை வழக்கில் முதல் ஆளாக சுள்ளான் முத்துப்பாண்டி என்ற நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அதனைத் தொடர்ந்து பிரபல ரவுடி வெள்ளைக்காணியின் தாயார் ஜெயக்கொடி மற்றும் சிவகங்கை மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன், மதுரை கல்மேடு நந்தகுமார், காமராஜபுரம் நவீன் குமார், சென்னை சேர்ந்த கார்த்திக் திருப்பூர் சேர்ந்த அசன் ஆகிய ஏழு பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் அந்த கொலை வழக்கில் மேலும் குற்றவாளியாக கருதப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் காரில் விளாச்சேரி பகுதியிலிருந்து நேற்று மாலை காரில் வேகமாக செல்வதை அறிந்த போலீசார் அவர்களை பிடிக்க பின் தொடர்ந்து சென்றனர்.
அவர்கள் மதுரை வேலம்மாள் அருகே உள்ள காலி இடத்தில் பதுங்கி இருப்பதை அறிந்து அங்கு சென்ற போலீசார் சுபாஷ் சந்திர போஸை பிடிக்கும் முயற்சித்தபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல முயன்ற ரவுடி தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளான். இந்நிலையில் ஜெய்ஹிந்த்புரம் காவல் ஆய்வாளர் பூமிநாதன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்தார். தற்போது காயமடைந்த போலீசார் சிகிச்சையில் உள்ளனர்.