இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, மை பாரத் அமைப்பு சார்பாக மதுரை திருநகரிலிருந்து திருப்பரங்குன்றம் வரை நேற்று (நவ. 11) மாலை சிறப்புப் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் இப் பேரணியில் கலந்து கொண்டார்.