மதுரை திருநகரைச் சேர்ந்த தவெக பெண் நிர்வாகி சர்மிளா, மாத்திரைகள் அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், வெளியிட்ட வீடியோவில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி மீது குற்றம் சாட்டியுள்ளார். ஐ.டி. நிறுவனத்தில் முதலீடு செய்தால் வட்டி தருவதாகக் கூறி தாயாரின் நிலத்தை அடகு வைத்து ரூ.16 லட்சம் பெற்றதாகவும், ஆனால் வட்டி தராததால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.