மதுரை: திருப்பரங்குன்றத்தில் பதட்டம்.. போலீஸ் குவிப்பு

563பார்த்தது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மல்லடிபட்டியை சேர்ந்த சையது அபுதாகிர் (53) என்பவர் தனது குடும்பத்தினருடன் இன்று (டிச. 25) காலை திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள சிக்கந்தர் பாஷா சமாதியில் கந்தூரி கொடுப்பதற்காக ஆட்டு கிடாயுடன் வந்தார்.

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் ஆட்டு கிடாயுடன் செல்ல அனுமதி இல்லை என கூறினர். இதனை அறிந்தவர்கள் பள்ளிவாசல் மற்றும் இதர இஸ்லாமிய அமைப்புகளுக்கு தகவல் அளித்தனர். இதனால் 50-க்கும் மேற்பட்டவர்கள் மலைக்கு செல்லும் பழனி ஆண்டவர் கோவில் படிக்கட்டு அருகே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

காவல் உதவி ஆணையர்கள் குருசாமி, கணேசன், சீதாராமன், சிறப்பு நுண்ணறிவு உதவி ஆணையர் சண்முகம், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் அப் பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. கூடுதலாக பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you