மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த 36 வயது இளம்பெண் முத்துலெட்சுமி, 'Helwin Denial' என்ற பெயரில் பேஸ்புக், வாட்ஸ்அப்பில் பழகிய நபரின் தூண்டுதலால், டெல்லி விமான நிலையத்திலிருந்து பரிசுப் பொருட்கள் பார்சல் வருவதாகவும், அதற்கு வரி மற்றும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ரூ.10 லட்சத்து 92 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.