மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி இரவில் மூன்று இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி ஜீவா நகர் பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கஞ்சா போதையில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் பைக்குகள், ஆட்டோக்கள், கனரக வாகனங்களை உடைத்தும், மரங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியும், நாய்களின் கால்களை உடைத்தும் பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.