மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றியம், நாகமலை புதுக்கோட்டை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-ll- 2024-25 திட்டத்தின் கீழ், நாகமலை புதுக்கோட்டை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை இன்று (பிப். 18) வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உயர் அதிகாரிகள், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன், திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.