மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக மதுரை மற்றும் விருதுநகரில் உள்ள பல்வேறு சார் பதிவாளர்கள் அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பணிகளை முடித்துவிட்டு கோவிலுக்கு வந்தார். கோவில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டு, சுவாமி முருகன் கல்யாண கோலத்தில் இருக்கும் புகைப்படம் பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.