மதுரை அருகே கீழ் கண்ட பகுதிகளில் நாளை (பிப். 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் பேருந்து நிலையம், பைபாஸ் ரோடு, மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி, வைகை வீதிகள், சந்தோஷ் நகர், வள்ளலானந்தாபுரம், ஜெ. ஜெ. நகர், வைக்கம் பெரியார் நகர், ரிங்ரோடு, பெரியசாமி நகர், திருப்பரங்குன்றம் ரோடு, காசி தோட்டம், பாம்பன் நகர், பாப்பாக்குடி, வெள்ளக்கல், பர்மா காலனி, பெருங்குடி, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, குரங்கு தோப்பு, ஏர்போர்ட் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும்.