ஸ்டாலின் தோல்வி வருத்தம் அளிக்கிறது. காங்கிரஸ் எம். பி பேடஞ

1பார்த்தது
ஸ்டாலின் தோல்வி வருத்தம் அளிக்கிறது. காங்கிரஸ் எம். பி பேடஞ
ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் இன்று (மே. 6) மதுரை விமான நிலையம் வந்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "தவெகவுக்கு ஆதரவு தருவது குறித்து தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் அறிவிப்பு வெளியிடுவார்," என்றார். முதலமைச்சர் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் தோற்றது வருத்தம் அளிக்கிறது. திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா தீபம் ஏற்றுவோம் என கூறியதால் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் கூறுவது புலம்பல். வன்மத்தின் அடிப்படையில் உருவானது. எங்களுடைய நோக்கம் தமிழகத்தில் பிஜேபி வரக்கூடாது," என தெரிவித்தார்.