மதுரையில் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

357பார்த்தது
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று (பிப். 7) சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில், நிதி மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய்த்துறை அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், அமைச்சர்கள் மூர்த்தி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி