தமிழக முதல்வர் இன்று மதுரை வருகை

0பார்த்தது
தமிழக முதல்வர் இன்று மதுரை வருகை
சென்னையில் இருந்து இன்று (பிப். 7) தனி விமானம் மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காலை 11:30 மணியளவில் மதுரை வருகிறார். அங்கிருந்து புறப்பட்டு ஜிஆர்டி கிராண்ட் ஹோட்டலில் மதியம் தங்குகிறார். மாலை 4:30 மணிக்கு விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, இரவு 7:30 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்து தனி விமானம் மூலம் சென்னை செல்கிறார். முதல்வரின் வருகையை முன்னிட்டு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். மேலும், முதல்வரின் வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி