இன்று (ஜன. 11) பகல் 12 மணிக்கு கொச்சியில் இருந்து மதுரை வந்த ஏர்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய விமானம், மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒத்தக்கடை, சிலைமான், திருப்புவனம், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் 14 முறை சுற்றி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, விமான நிலைய கட்டுப்பாட்டு அலைவரிசையில் செயல்பாடுகள் மற்றும் அவசர கால அழைப்புகள் போன்றவற்றுக்கான சோதனை ஓட்டம் நடைபெற்றதாக தெரிவித்தனர்.