திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக நிகழ்வுக்கு முறையான முன்னேற்பாடுகள் செய்யாததால், கடுமையான வெயிலால் குழந்தைகள், பெண்கள் உட்பட பக்தர்கள் பலர் மயக்கமடைந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என தெரிந்தும் அடிப்படை வசதிகளை செய்து தர தவறிய தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய முன்னேற்பாடுகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறையும், தமிழக அரசும் வலியுறுத்தப்பட்டுள்ளது.